×

திருவெறும்பூர் அருகே இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை உள்துறை அமைச்சக அதிகாரிகள் ஆய்வு: பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்

திருவெறும்பூர்: திருவெறும்பூர் அருகே வாழவந்தான் கோட்டையில் உள்ள இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமை மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். திருவெறும்பூர் அருகே வாழவந்தான்கோட்டை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் உள்ளது. இந்த முகாமை மத்திய அரசின் அயலகத் தமிழர் நலன் துணைச் செயலாளர் பல்ஜித்சிங் மற்றும் அதன் பிரிவு அலுவலர் சுப்ரமணியன் மற்றும் தமிழக மறுவாழ்வுத் துறை இணை இயக்குனர் ரமேஷ், மறுவாழ்வுத்துறை தேர்வு நிலை கண்காணிப்பாளர் புகழேந்தி, திருச்சி தனித்துணை கலெக்டர் ஜமுனாராணி மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் ரவி, கணேசன் ஆகியோர் அடங்கிய குழுவினர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தனர்.

அப்போது முகாம் மக்கள் தங்களுக்கு வீடு, சாக்கடை வசதி போன்ற அடிப்படை வசதிகள் வேண்டும் என்று கூறினர். உடனடியாக அதிகாரிகள் உங்களுக்கு பண கொடை, காஸ், மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, ரேஷன் பொருட்கள், தண்ணீர் வசதி போன்றவை சரியாக கிடைக்கின்றதா என கேட்டறிந்தனர். பின்னர் முகாமின் முன்பகுதியை மட்டும் பார்வையிட்டு சென்றனர். இதே போல் கொட்டப்பட்டுவில் உள்ள இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமையும் இவர்கள் ஆய்வு செய்தனர்.

Tags : Home Ministry ,Lankan Tamil Rehabilitation Camp ,Thiruverumbur , Thiruverumbur, Sri Lankan Tamil Rehabilitation Camp, Home Ministry official
× RELATED டெல்லியில் ஒன்றிய அரசு அலுவலக கட்டடத்தில் தீ விபத்து!!