×

மாணவிகளிடம் சில்மிஷம்: தலைமை ஆசிரியர் கைது

கோவில்பட்டி: கோவில்பட்டியில் மாணவிகளுக்கு தொந்தரவு கொடுத்த தலைமை ஆசிரியர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்துள்ள சின்னகொல்லம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தாமஸ் சாமுவேல் (57). இவர், கோவில்பட்டி பகுதியில் செயல்படும் அரசு உதவிபெறும் பள்ளியில் தலைமை ஆசிரியராக உள்ளார். இப்பள்ளியில் படிக்கும் மாணவிகள் 8 பேருக்கு தாமஸ் சாமுவேல் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

இதுகுறித்து மாணவிகள் பெற்றோரிடம் தெரிவித்த நிலையில், கோவில்பட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பத்மாவதி வழக்கு பதிந்து போக்சோ சட்டத்தின் கீழ் ஹெச்எம் தாமஸ் சாமுவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : Silmisham , Silmisham headmaster arrested by students
× RELATED காட்பாடியில் 3 மாதங்களாக சிறுமியை...