×

ஜாம்புவானோடையில் 3 குடிசை வீட்டில் தீ

முத்துப்பேட்டை: முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடையை சேர்ந்த ஜாகிர் உசேன் என்பவருக்கு சொந்தமான மூன்று குடிசை வீடுகள் ஆற்றங்கரை தர்கா அருகே உள்ளது. நேற்று திடீரென குடிசை வீட்டில் திடீரென்று தீ பிடித்தது. இதனை கண்ட அப்பகுதியினர் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீ மளமளவென்று பரவி அருகில் இருந்த குடிசைகளுக்கும் பரவி எரிந்தது. இதையடுத்து முத்துப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனாலும் தீ விபத்தால் 3 குடிசை வீடுகள் முழுவதும் எரிந்து வீட்டில் இருந்த பொருட்களும் சாம்பலாகியது. இது குறித்து தகவல் அறிந்து வந்த முத்துப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Jambuwanodai , Jambuwanodai, cottage house fire
× RELATED வாக்கு சாவடிக்குள் புகுந்து வாக்காளர்களை விரட்டிய குடிமகனால் பரபரப்பு