×

மொழி என்பது தேவை சார்ந்ததே தவிர திணிப்பு சார்ந்ததல்ல... அமித்ஷாவின் கருத்துக்கு வைரமுத்து கண்டனம்!!

சென்னை : ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆங்கிலத்திற்கு பதில் இணைப்பு மொழியாக இந்தி பயன்படுத்தப்பட வேண்டும் என கூறியுள்ளார். ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக மாநிலங்கள் இந்தி மொழியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று  அமித் ஷா கூறியிருப்பது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட பலரும் ஒன்றிய அரசுக்கு எதிராக கருத்து பதிவிட்டு வந்த நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில்,  பாரதிதாசனின் தமிழுக்கு அமுதென்று பெயர் என்ற கவிதையில் வரும் இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு நேர் என்று பதிவிட்டு,  ழகரம் ஏந்திய தமிழணங்கு என்ற வார்த்தைகளை தாங்கிய போட்டோவை பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில்,

வடக்கே வாழப்போன தமிழர்
இந்தி கற்கலாம்
தெற்கே வாழவரும் வடவர்
தமிழ் கற்கலாம்

மொழி என்பது
தேவை சார்ந்ததே தவிர
திணிப்பு சார்ந்ததல்ல

வடமொழி ஆதிக்கத்தால்
நாங்கள் இழந்த நிலவியலும் வாழ்வியலும் அதிகம்

இதற்குமேலும் இந்தியா?
தாங்குமா இந்தியா? என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : Vyaramuthu ,Amitshah , Language, Amitsha, Concept, Vairamuthu
× RELATED பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய மஜத...