×

ஆஸ்கர் விழாவில் பங்கேற்க வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் தடை : கிறிஸ் ராக்கிற்கு நன்றி தெரிவித்தது ஆஸ்கர் கமிட்டி

வாஷிங்டன் : ஆஸ்கர் விருது மற்றும் பிற அகாடமி நிகழ்வுகளில் கலந்து கொள்ள நடிகர் வில் ஸ்மித்திற்கு 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் சமீபத்தில் நடைபெற்ற 94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் தொகுப்பாளரும் காமெடி நடிகருமான கிறிஸ் ராக்கை மேடையிலேயே நடிகர் வில் ஸ்மித் கன்னத்தில் அறைந்தது.கறுப்பு அத்தியாயமாக பதிந்துவிட்டது. மனைவியின் தலைமுடியை கிறிஸ் ராக் கிண்டல் செய்ததால் ஆத்திரம் அடைந்த வில் ஸ்மித், யாரும் எதிர்பாராத வகையில் இவ்வாறு நடந்து கொண்டது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.

இதற்காக பின்னர் மன்னிப்பு கேட்டதுடன் ஆஸ்கர் அகாடமி உறுப்பினர் பதவியையும் வில் ஸ்மித் ராஜினாமா செய்தார். இது தொடர்பாக விசாரித்த அகாடமி அமைப்பு, ஆஸ்கர் விருது விழா மற்றும் பிற அகாடமி நிகழ்வுகளில் கலந்து கொள்ள வில் ஸ்மித்திற்கு 10 ஆண்டுகள் தடை விதித்துள்ளன. ஆஸ்கர் மேடையில் ஸ்மித் வெளிப்படுத்திய நிகழ்வு ஏற்றுக் கொள்ள முடியாதது என்றும் அந்த அசாதாரண சூழ்நிலையிலும் அமைதி காத்த கிறிஸ் ராக்கிற்கு நன்றி என்றும் அகாடமி தெரிவித்துள்ளது.   


Tags : Will Smith ,Oscar ,Chris Rock ,Oscar Committee , Oscar, ceremony, Will Smith, ban, Chris Rock
× RELATED பிரபல ஹாலிவுட் நட்சத்திர நடிகரான ஜான்...