முதல்வர் குறித்து அவதூறு பேச்சு குமரி மாவட்ட பா.ஜ. பிரசார அணி தலைவர் கைது: நாகர்கோவில் சிறையில் அடைப்பு

ஆரல்வாய்மொழி: குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் கடந்த 6ம் தேதி பாரதிய ஜனதா கட்சியின் 42 வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பிரசார அணி மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கலைஞர், கனிமொழி எம்.பி உள்ளிட்டோரை அவதூறாக பேசினார்.

இது தொடர்பாக திமுக மாவட்ட பொருளாளர் கேட்சன் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். நேற்று அதிகாலை இரணியலில் உள்ள ஜெயபிரகாஷ் வீட்டுக்கு போலீசார் சென்ற போது,  கதவை பூட்டிக்கொண்டு வெளியே வர வில்லை. அதற்குள் அங்கு வந்த பாஜவினர் போலீசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  பின்னர், ஜெயபிரகாஷை போலீசார் கைது செய்தனர். இதை கண்டித்து பாஜவினர் ஆரல்வாய்மொழி காவல் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  

ஜெயபிரகாஷ் மீது தரக்குறைவாக விமர்சித்தல், பெண்களை இழிவுப்படுத்தி பேசுதல், ெபாது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்கு பின், நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஜெயபிரகாஷ் ஆஜர்படுத்தப்பட்டு, நாகர்கோவிலில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories: