×

உளுந்தம் பருப்பு விரைவில் வழங்கப்படும்; கைரேகை பிரச்னைக்கு புது ஏற்பாடு: அமைச்சர் சக்கரபாணி தகவல்

தமிழக சட்டப் பேரவையில் நேற்று உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலளித்து பேசியதாவது:  கண்டிப்பாக உளுந்தம் பருப்பு ஒரு கிலோவும், சர்க்கரையும் கூடுதலாக வழங்குவோம் என்று அறிவித்தோம். சொன்ன வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவோம். டெல்டா மாவட்டங்களிலும் திறந்த வெளி ’கேம்ப்’ இருக்காது. தமிழ்நாட்டில் ஆயிரம் முதல் 3 ஆயிரம் ரேஷன் அட்டைகள் இருக்கிற 5 ஆயிரம்  கடைகள் உள்ளன. அந்தக் கடைகளைப் பிரிப்பதற்கான ஒரு திட்டத்தை விரைவில் முதல்வர் அறிவிப்பார் என்றார்.

 அப்போது சபாநாயகர் மு.அப்பாவு குறுக்கிட்டு, ‘‘கைரேகை விழாமல் அதிக மக்கள் அதிகாரியிடம் சென்று ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு மாதமும் அனுமதி வாங்க வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு கடையிலும் 20 சதவிவீத மக்களுக்காவது இந்த நிலை ஏற்படுகின்றது. அதற்கு ஒரு சரியான முடிவினை சொல்லிவிடுங்கள்” என்று குறிப்பிட்டார்.  அதற்கு பதிலளித்த அமைச்சர் சக்கரபாணி, ‘முதல்வருடன் கலந்து பேசி நல்ல முடிவாக எடுக்கப்பட உள்ளது. இனிமேல் கைரேகை கூட வேண்டாம் என்றார்.


Tags : Umuntham ,Minister ,Sakarabani , Pulses, fingerprint problem, Minister Chakrabarty,
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...