இயக்குனர் பாபா விக்ரம் காலமானார்

சென்னை: கருணாநிதி கதை, வசனத்தில் மீனா நடித்த ‘கலைஞரின் கண்ணம்மா’ என்ற படத்தை தயாரித்து இயக்கியவர், எஸ்.எஸ்.பாபா விக்ரம் (83). ‘என் இதய ராணி’, ‘பொம்மை நாய்கள்’ படங்களையும் தயாரித்து இயக்கினார். தற்போது இமான் அண்ணாச்சி நடிப்பில் ‘அதிர்ஷ்டம்’ படத்தை தயாரித்து இயக்கி வந்தார். உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த பாபா விக்ரம்,  தென்காசி ஆழ்வார்குறிச்சியில் தனது மனைவி லட்சுமி, மகள் கண்ணம்மாவுடன் வசித்தார். இந்நிலையில், நேற்று மாலை 5 மணியளவில் காலமானார்.

Related Stories: