×

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் பீஸ்ட் 3வது பாடல் வெளியீடு

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்துள்ள ‘பீஸ்ட்’ படத்தின் 3வது பாடல் நேற்று வெளியானது. இதையடுத்து ரசிகர்கள் உற்சாகமடைந்து, படத்தின் வெளியீட்டை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். சன் பிக்சர்ஸ் சார்பில் சன் டிவி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பிரமாண்டமாக தயாரித்துள்ள படம், பீஸ்ட். விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே  நடித்துள்ளார். கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். யோகி பாபு, இயக்குனர் செல்வராகவன், ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் நடித்துள்ளனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசை அமைத்துள்ளார்.

சர்கார் படத்துக்குப் பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் படம் என்பதால், ரசிகர்கள் மத்தியில் ‘பீஸ்ட்’ படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வரும் 13ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 ெமாழிகளில் இப்படம் வெளியாகிறது. விஜய் நடிப்பில் வெளியாகும் முதல் பான் இந்தியா படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையொட்டி கடந்த 2ம் தேதி இப்படத்தின் தமிழ் டிரைலர் வெளியிடப்பட்டது. யுடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்திருந்த அந்த டிரைலருக்கு ரசிகர்கள் பலத்த வரவேற்பு கொடுத்தனர்.
இந்நிலையில், கடந்த 5ம் தேதி இப்படத்தின் தெலுங்கு டிரைலர் வெளியிடப்பட்டது. இதையடுத்து ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ரசிகர்கள் பெரிதும் உற்சாகமடைந்து அதிக வரவேற்பு கொடுத்தனர்.

ஏற்கனவே நடிகர் சிவகார்த்திகேயன் எழுதிய ‘அரபிக்குத்து’ என்ற பாடலும், கு.கார்த்திக் எழுதி விஜய் பாடிய ‘ஜாலியோ ஜிம்கானா’ என்ற பாடலும் சமூக வலைத்தளங்கள் மற்றும் யுடியூப்பில் வைரலானது. ரசிகர்கள் இப்பாடல்களின் ‘லிங்க்’கை தங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிர்ந்து வைரலாக்கி இருந்தனர். இந்நிலையில், நேற்று மாலை ‘பீஸ்ட்’ படத்தின் 3வது பாடல் வெளியிடப்பட்டது. ‘பீஸ்ட் மோட்’ என்ற இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த பாடலும் யுடியூபில் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.


Tags : Vijay ,Sun Pictures , Sun Pictures, Vijay, Beast`
× RELATED மனைவியின் தங்கையான சிறுமியை கடத்தி...