ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா

பாட்செப்ஸ்ட்ரூம்: தென் ஆப்ரிக்காவில் நடைபெறும் மகளிர் ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டித் தொடரில், இந்திய அணி அரையிறுக்கு முன்னேறியது. லீக் சுற்றில் அனைத்து போட்டிகளிலும் வென்று 9 புள்ளிகளுடன் டி பிரிவில்முதலிடம் பிடித்த இந்தியா, காலிறுதியில் நேற்று தென் கொரியா சவாலை சந்தித்தது. தொடக்கத்தில் இருந்தே ஒருங்கிணைந்து விளையாடி நெருக்கடி கொடுத்த இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இந்திய வீராங்கனைகள் மும்தாஸ் கான் (11வது நிமிடம்), லால்ரிண்டிகி (15’), சங்கீதா குமாரி (41’) கோல் போட்டனர். மும்முறை சாம்பியனான நெதர்லாந்து - தென் ஆப்ரிக்கா இடையே நடக்கும் காலிறுதியில் வெற்றி பெறும் அணியுடன் இந்திய நாளை அரையிறுதியில் மோதும்.

Related Stories: