இன்ஸ்பெக்டர் திட்டியதால் மகளிர் காவல் நிலையத்தில் ஏட்டு தற்கொலை முயற்சி

தாம்பரம்: திருநீர்மலை பகுதியை சேர்ந்த செண்பகம் (35), தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக உள்ளார். இந்நிலையில், அந்த காவல் நிலைய இன்ஸ்பெக்டர்  லட்சுமி,  நேற்று முன்தினம் மாலை, காவல் நிலையத்தில் ரோல் கால் செய்து அதனை படமெடுத்து தனக்கு அனுப்பி வைக்குமாறு செண்பகத்திடம் கூறியுள்ளார். ஆனால்,  அந்த வேலையை அவர் செய்யாததால் நேற்று ஆய்வாளர் லட்சுமி, சக போலீசார் முன்னிலையில் செண்பகத்தை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த செண்பகம்,  எலி மருந்து சாப்பிட்டு மயங்கினார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

Related Stories: