×

எண்ணூர் காட்டுப்பள்ளி முதல் தச்சூர் வரையில் ரூ.2,673 கோடியில் 25.40 கி.மீ. நீளத்துக்கு புதிய பசுமை சாலை: ஜப்பான் நிதி உதவியுடன் செயல்படுத்த அரசு அனுமதி

சென்னை: தொழில் நிறுவனங்களின் கனரக வாகனங்களை துறைமுகத்துடன் இணைக்கும் வகையில் சென்னை எண்ணூர் காட்டுப்பள்ளி முதல் தச்சூர், திருவள்ளூர், பெரும்புதூர், சிங்கப்பெருமாள் கோயில் வரை சுமார் 133.45 கி.மீ. நீள சென்னை எல்லைச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் பகுதி-1 பணியாக எண்ணூர் காட்டுப்பள்ளி முதல் தச்சூர் வரையிலான 21.7 கி.மீ நீள சாலை மற்றும் சென்னை வெளிவட்ட சாலையுடன் இணைக்கும் 3.7 கி.மீ நீள சாலை என மொத்தம் 25.40 கி.மீ நீளத்திற்கு புதிய  பசுமை சாலை அமைக்க ரூ.2673.42 கோடிக்கு ஜப்பான் பன்னாட்டு நிதியத்தின் உதவியில் செயல்படுத்திட அரசு அனுமதித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 8 பெரிய பாலங்கள், 7 சிறு பாலங்கள், 4  கீழ்பாலங்கள் / மேம்பாலம், ஒரு பல்வழி பரிமாற்ற மேம்பாலம், இரு ரயில்வே மேம்பாலம் மற்றும் 4 கனரக வாகனங்கள் நிறுத்துமிடம் ஆகியவை எடுத்துக் கொள்ளப்பட்டுப் பிரிக்கப்பட்ட 6 வழித்தட சாலை மற்றும் இருபுறமும் இருவழித்தட சேவை சாலையுடன் அமைக்கப்பட உள்ளது.
இந்த சாலைப்பணி டாடா-ஐஏவி வாஜ் கூட்டு நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிகழ்ச்சியில் ஜப்பான் தூதரக பொது அதிகாரி தாக மசாயுக்கி, ஜப்பான்  நிதியத்தின் இந்தியாவிற்கான முதன்மை பிரதிநிதி சைட்டோ மிட்சுனோரி, சென்னை எல்லை சாலை திட்ட இயக்குநர் பாஸ்கரன், மற்றும் அதிகாரிகள் எம்.கே.செல்வன் எம்.விஜயா, எம்.ஞானசேகரன் ஆகியோர் பங்கேற்றனர். முன்னதாக, ஜப்பான் அரசு நிதி உதவியில் செயல்படுத்தப்படும் சென்னை எல்லை சாலையின்  பகுதி-I பணிகளை தச்சூரில், இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் மேதகு சுசுகி  சட்டோஷி கடந்த 7ம் தேதிபார்வையிட்டார்.

Tags : Ennore Forest ,School ,Thatchur ,New Green Road ,Japan , 2,673 crore for 25.40 km from Ennore Forest School to Thatchur. New Green Road for Length: Government Permission to Operate with Financial Assistance from Japan
× RELATED வத்திராயிருப்பு அரசு பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி