×

இந்தி குறித்த அமித்ஷா பேச்சு நாட்டின் பன்மைத்துவத்துக்கு எதிரானது: திருமாவளவன்

சென்னை: இந்தி குறித்த அமித்ஷா பேச்சு நாட்டின் பன்மைத்துவத்துக்கு எதிரானது என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில்; இந்திய அலுவல் மொழிகள் 22. இந்தி அவற்றுள் ஒன்று. இந்தியைப் பேசுவோரின் எண்ணிக்கையை விட பிறமொழிகள் பேசுவோரின் எண்ணிக்கை பலமடங்கு அதிகம். ஆனால், பிறமொழிகளைப் பேசுவோரின் உரிமைகளுடன்  நாட்டின் பன்மைத்துவத்தையும் சிதைக்கிற முயற்சியில் குறியாகவுள்ளனர். எனவேதான் அமித்ஷா இப்படி பேசிகிறார். அமித்ஷாவின் இந்தக் கருத்துப் புதியதல்ல. ஒரேநாடு- ஒரேமொழி எனும் ஃபாசிசப் போக்கை வலுவாக திணிப்பதற்குரிய ஆபத்தான முயற்சி. ஆங்கிலம் அந்நிய மொழி என்னும் வாதங்களை முன்வைத்து அப்பாவி மக்களை ஏய்க்கும் நோக்கில் ஈடுபடுகின்றனர். இவர்களின் மக்கள் விரோதப் போக்கினை வன்மையாகக் கண்டிருக்கிறோம் இவ்வாறு கூறினார்.


Tags : Amitsha ,Thirmaavulavan , Amit Shah's speech on Hindi is against the pluralism of the country, says Vizika leader Tilak Thirumavalavan
× RELATED மக்களவைத் தேர்தலில் போட்டியிடும்...