×

உலக மக்களின் ஒற்றுமையை மேம்படுத்தும் திறன் சீனாவுக்கு உண்டு: சிறந்த பங்களிப்பு செய்தவர்களைக் கவுரவிக்கும் கூட்டத்தில் அதிபர் பெருமிதம்

பெய்ஜிங்: ஒலிம்பிக் போட்டியை நடத்தியதன் மூலம் உலக மக்களிடையே ஒற்றுமை மற்றும் நட்பை மேம்படுத்தும் திறன் சீன மக்களுக்கு உள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக சீன அதிபர் சீ சின்பிங் தெரிவித்துள்ளார். பெய்ஜிங் 2022 ஒலிம்பிக், பாராலிம்பிக், குளிர்கால விளையாட்டு போட்டிகளில் சிறந்த பங்களிப்பை செய்தவர்களை கவுரவிப்பதற்காக தலைநகர் பெய்ஜிங்கில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உரையாற்றிய சீன அதிபர் சீ சின்பிங்7 வருட கடின உழைப்பிற்குப் பிறகு, பெய்ஜிங் 2022 ஒலிம்பிக், பாராலிம்பிக் மற்றும் குளிர்கால விளையாட்டுகளை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.

இதன்மூலம் சீனா உலகநாடுகளின் கவனத்தை ஈர்த்ததாக பெருமிதம் தெரிவித்த அவர், சீன மக்கள், மற்ற நாடுகளை சேர்ந்தவர்களுடன் சேர்ந்து, பல்வேறு சிரமங்களையும், சவால்களையும் கடந்து வந்துள்ளனர் என குறிப்பிட்டார். மீண்டும் ஒரு ஒலிம்பிக் போட்டியை நடத்த தயாராக இருப்பதாகவும், அது வரலாற்றில் இடம் பிடிப்பதோடு ஒலிம்பிக்கின் பெருமையை பகிர்ந்து கொள்ளும் எனவும் சீ சின்பிங் தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் போட்டியை நடத்தியதன் மூலம் உலக மக்களிடையேயே ஒற்றுமை மற்றும் நட்பை மேம்படுத்துவதற்கான திறன் மற்றும் ஆர்வம் சீன மக்களுக்கு உள்ளது என்பது நிரூபிக்கபட்டுள்ளதாக சீ சின்பிங்பெருமிதம் தெரிவித்துள்ளார்.    


Tags : China ,Chancellor , People of the world, unity, China, meeting, president, pride
× RELATED தென் சீன கடலுக்கு பயணம்: 3 இந்திய போர் கப்பல்கள் சிங்கப்பூர் சென்றடைந்தன