×

இந்தி இந்தியாவின் தேசிய மொழியல்ல; இந்தியை தேசிய மொழியாக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்!: அமித்ஷா கருத்துக்கு சித்தராமையா கண்டனம்..!!

பெங்களூரு: ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தியை ஏற்க வேண்டும் என்ற அமித்ஷாவின் கருத்துக்கு கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தி இந்தியாவின் தேசிய மொழியல்ல; இந்தியை தேசிய மொழியாக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். பல மொழிகள் பேசுவதே இந்திய நாட்டின் ஆதாரம் ஆகும். பன்முகத்தன்மையே இந்தியாவை ஒரே நாடாக வைத்திருக்கிறது. பன்முகத்தன்மையை சீர்குலைக்க பாஜக முயன்றால் கடுமையான எதிர்விளைவுகள் ஏற்படும். இந்தியை திணிப்பது கூட்டுறவு கூட்டாட்சி அல்ல, மாறாக வலுக்கட்டாயமான கூட்டாச்சியாகும் என்று சித்தராமையா கருத்து தெரிவித்துள்ளார். நாட்டின் மொழிகள் குறித்து பாஜகவின் குறுகிய பார்வை திருத்தப்பட வேண்டும்.

சாவர்க்கர் போன்றோரின் போலி தேசியவாதிகளிடம் இருந்தே பாஜகவின் கோளாறான மொழிக்கொள்கை உருவாகியுள்ளது. இந்தி பேசாத மாநிலங்களில் இருந்து கலாச்சார பயங்கரவாதத்தை பாஜக கட்டவிழ்த்துவிடுவதாக கண்டனம் தெரிவித்தார். கர்நாடக ஏகிகரணா இயக்கத்தை சேர்ந்த கவிஞர்கள், எழுத்தாளர்கள், நடிகர்களின் முயற்சிகள் பாதுகாக்கப்பட வேண்டும். மாநிலங்களுக்கு மொழி சுதந்திரம், கலாச்சார சுதந்திரத்தை  அதிகமாக வழங்க வேண்டிய நேரம் இது என பாஜக உணர வேண்டும். அனைத்து அகில இந்திய போட்டி தேர்வுகளும் மாநில மொழிகளில் நடத்தப்பட வேண்டும். இந்தி திணிப்பை தவிர்க்கும் வகையில் தேசிய கல்விக் கொள்கையில் மாற்றம் கொண்டுவர வேண்டும்.

அனைத்து மாநில மொழிகளும் அலுவல் மொழியாக்கப்பட வேண்டும் எனவும் சித்தராமையா வலியுறுத்தினார். அரசியல் லாபத்துக்காக அமித்ஷா தாய் மொழி குஜராத்தியை புறக்கணித்து இந்தியை ஆதரிப்பது துரதிருஷ்டவசமானது என எனவும் அவர் சாடினார். உள்ளூர் மொழிக்கு மாற்றாக அல்ல, ஆங்கிலத்துக்கு மாற்று மொழியாக இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும். அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்ற நேரம் வந்துவிட்டது என்று ஒன்றிய உள்துறை அமித்ஷா பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Tags : India ,Chidramaiah ,Amit Shah , Hindi, National Language, Amitsha, Chidramaiah
× RELATED மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில்...