×

இணைப்பு மொழி என்று ஒன்றைத் திணிப்பது நாட்டை இணைக்கப் பயன்படாது அது பிரிக்கத்தான் பயன்படும்: அமித்ஷாவின் கருத்துக்கு திமுக எம்.பி. கனிமொழி கண்டனம்

சென்னை: ஆங்கிலத்துக்கு மாற்று மொழியாக இந்தியை ஏற்க வேண்டும் என்ற அமித்ஷாவின் கருத்துக்கு திமுக எம்.பி.கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழி குழுவின் 37வது கூட்டத்திற்கு தலைமை வகித்து பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாட்டில் வெவ்வேறு மொழிகளை பேசும் மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ளும் போது ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தி மொழியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார். அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தி மொழியை ஏற்க வேண்டும் எனவு தெரிவித்திருந்தார்.

அமித்ஷாவின் கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இந்தியாவின் பன்முகத்தன்மையில் நடத்தப்படும் தாக்குதல் இது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியிருந்தது. இந்நிலையில், ஆங்கிலத்துக்கு மாற்று மொழியாக இந்தியை ஏற்க வேண்டும் என்ற அமித்ஷாவின் கருத்துக்கு திமுக எம்.பி.கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இணைப்பு மொழி என்று ஒன்றைத் திணிப்பது நாட்டை இணைக்கப் பயன்படாது அது பிரிக்கத்தான் பயன்படும். ஒன்றிய அரசும் அமைச்சர்களும் இந்தி எதிர்ப்பின் வரலாற்றை, தியாகங்களைத் தெரிந்து கொள்ளவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.


Tags : Amitsha ,Thimuka M. , Link Language, Amitsha, DMK MP Kanimozhi
× RELATED மக்களவைத் தேர்தலில் போட்டியிடும்...