×

கொலைகளை தடுக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் சஸ்பெண்ட்: தென் மண்டல ஐஜி எச்சரிக்கை

மதுரை: ‘பழிக்குப் பழியாக நடக்கும் கொலைகளை தடுக்க வேண்டும், இதனை பொறுப்பில் உள்ள உயரதிகாரிகள் தட்டிக் கழிக்க கூடாது, நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தென்மண்டல ஐஜி அஸ்ராகார்க் அதிரடி உத்தரவிட்டுள்ளார். போலீசாரிடம் அவர் மைக்கில் பேசிய ஆடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோவில் அவர் பேசியுள்ளதாவது: சாதி ரீதியிலான கொலைகள் குறித்து, முன்னதாக நமது சிறப்பு குழுவினரிடம் இருந்து தகவல் வந்தால் போலீஸ் உயரதிகாரிகள் அது குறித்து விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தகவல் வந்தும், நடவடிக்கை எடுக்காதபட்சத்தில், போலீஸ் உயர் அதிகாரிகளே அதற்கு பொறுப்பேற்க வேண்டும்.

விசாரணையின் அடிப்படையில் விளக்கம் கேட்டு அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படும். நியாயமாக என்ன இருக்கிறதோ அதன்படி குற்றப்பத்திரிக்கை போட வேண்டும். பொறுப்பை உயர் அதிகாரிகள் தட்டிக் கழிக்க கூடாது. தவறுகளை தடுக்காத அதிகாரிகள் முதலில் பணியிடமாற்றம் செய்யப்படுவார்கள். அதன் பின்னர் பணியிடம் நீக்கம் செய்யப்படுவார்கள். தொடர்ந்து குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். தவறுகளை தடுக்கும் பட்சத்தில் நீங்கள் கவுரவமாக பணியை காப்பாற்றிக் கொள்ள முடியும். சைபர் கிரைமின் செயல்பாடுகள் குறித்து பல போலீசாருக்கு தெரியவில்லை. விழிப்புணர்வே இல்லை. டிஜிபி கேட்கும் போது கூட 1930 என்றால் யாருக்கும் தெரியவில்லை. சைபர் கிரைம் உதவி எண்கள் கூட தெரியாமல் இருக்கின்றனர்.

பாதிக்கப்பட்டவர்கள் போன் செய்தால் நடவடிக்கை எடுக்க தெரிய வேண்டும். புகார் கொடுக்கும் நபர்களை அமர வைத்து, விசாரிக்க வேண்டும். உரிய நடவடிக்கை எடுத்ததால் குற்றங்கள் குறைய வாய்ப்பு உள்ளது. லீவு கொடுப்பதில் குழு அமைக்கக் கூடாது. அனைவருக்கும் ஒரே மாதிரி லீவு கொடுக்க வேண்டும். போலீசாருக்கு பிரச்னை இருந்தால் வேறு மாவட்டத்தில் இருக்கும் தகவல்களை கொடுக்க வேண்டும் என்றால் எனது வாட்ஸ்அப்பில் 94453-00002 என்ற எண்ணில் தகவல் கொடுக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த உத்தரவு போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Southern Region ,IG , Officers suspended for failing to take action to prevent killings: Southern Region IG warns
× RELATED அதிமுக ஆட்சியில் போலி அனுமதி எண்...