புள்ளிங்கோ குரூப் போல் வந்ததால் விழுப்புரம் அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு முடி வெட்டிய ஊராட்சி மன்ற தலைவர்-ஆசிரியர்களுக்கு அடங்க மறுத்ததால் நடவடிக்கை

விழுப்புரம் : விழுப்புரம் அருகே பில்லூரில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. 1 முதல் 12ம் வகுப்பு வரை சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கிராமப் பகுதியில் இருந்து செல்லும் மாணவர்கள் பலர் புள்ளிங்கோ குரூப் போல் சிகை அலங்காரம் செய்து கொண்டும், சீருடைகளை இறுக்கமாக போட்டுக்கொண்டும் பள்ளிக்கு செல்வதாக புகார் கூறப்பட்டது.

இதனை ஒழுங்குப்படுத்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பல முறை மாணவர்கள் ஒழுக்கமாக பள்ளிக்கு வர வேண்டும். ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அனுப்பிய சுற்றறிக்கையை காண்பித்து அறிவுறுத்தினர். ஆனால் மாணவர்கள் இதனை பின்பற்றாமல் தொடர்ந்து சென்று கொண்டிருந்தனர். இதனிடையே, நேற்று ஊராட்சி மன்ற தலைவர் சித்திர

சேனன் வகுப்பறை கட்டிடங்கள் குறித்து ஆய்வுக்கு சென்றார்.

அப்போது தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் பள்ளிக்கு வரும் மாணவர்கள் ஒழுங்கீனமாக சிகை அலங்காரம் செய்து வருவதாகவும், மாணவிகள் படிக்கும் இப்பள்ளியில் மாணவர்கள் இப்படி வருவது சரியல்ல. நாங்கள் பலமுறை கூறியும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். ஊராட்சி மன்ற தலைவரான நீங்கள்தான் நடவடிக்கை எடுத்து அறிவுறுத்த வேண்டும் என கூறினர். உடனடியாக ஊராட்சி மன்ற தலைவரே களத்தில் இறங்கி, புள்ளிங்கோ குரூப் போல சிகை அலங்காரம் செய்து வந்த 50 மாணவர்களை பிடித்து முடி வெட்டி அறிவுரை வழங்கி பள்ளிக்கு அனுப்பி வைத்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: