அமித்ஷாவின் கருத்துக்கு திமுக எம்.பி. கனிமொழி கண்டனம்

சென்னை: ஆங்கிலத்துக்கு மாற்று மொழியாக இந்தியை ஏற்க வேண்டும் என்ற அமித்ஷாவின் கருத்துக்கு திமுக எம்.பி.கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இணைப்பு மொழி என்று ஒன்றைத் திணிப்பது நாட்டை இணைக்கப் பயன்படாது அது பிரிக்கத்தான் பயன்படும். ஒன்றிய அரசும் அமைச்சர்களும் இந்தி எதிர்ப்பின் வரலாற்றை, தியாகங்களைத் தெரிந்து கொள்ளவேண்டும் என கூறினார்.

Related Stories: