×

பெருநாட்டு அதிபருக்‍கு ஆதரவாக தொழிற்சங்கத்தினர் பேரணி: அதிபரை செயல்படவிடாமல் தடுக்கும் காங்கிரசை முடக்க கோரிக்கை

லிமா: பெரு நாட்டு அதிபருக்கு ஆதரவாக அந்நாட்டைச் சேர்ந்த பல்வேறு தொழிற்சங்கத்தினர், மாபெரும் பேரணி நடத்தினர். அதிபரை செயல்படாமல் தடுக்கும் காங்கிரசை முடக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். பெரு நாட்டில் நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மேலும் அதிகரித்து வரும் சுங்கக்கட்டண உயர்வும் மக்களை கடுமையாக பாதித்துள்ளது. எரிபொருள் மற்றும் சுங்கக்கட்டண விலை உயர்வை எதிர்த்து மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். விலைவாசி உயர்வை கண்டித்து பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் கிளர்ச்சியாளர்கள் ஊடுருவி பெரும்சேதத்தை ஏற்படுத்தியதாக பெரு நாட்டு பிரதமர் அனிபல் டாரஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில் அதிபர் பெட்ரோ காஸ்டில்லோவுக்கு பொதுத் தொழிலாளர் கூட்டமைப்பு மற்றும் கல்வி தொழிலாளர் சங்கம் உள்ளிட்டோர் தலைநகர் லிமாவில் மாபெரும் பேரணி நடத்தினர். வரி சீர்திருத்தம், விவசாய புரட்சி தேவை என இதில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர். கல்வி மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்றும், வேலை, தொழிலாளர் உரிமைகளை உருவாக்க அதிக பொது மற்றும் தனியார் முதலீடுகள் தேவை என்றும் குறிப்பிட்டனர். ஆனால் காங்கிரஸ் அமைப்பு அதிபரை ஆட்சி அமைக்கவிடாது என குற்றம்சாட்டிய அவர்கள், காங்கிரசை முடக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். ஜனநாயக ஆட்சி மற்றும் மக்கள் உரிமைகளை பாதுகாக்க வீதிகளில் இறங்கியுள்ளோம் என தொழிலாளர்கள் தெரிவித்தனர்.      


Tags : Republican ,Congress , Big country, president, support, union, rally, congress, freeze
× RELATED கிரிமினல் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் டிரம்ப் ஆஜர்