×

நீதிபதி திடீர் விடுமுறை... அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா உரிமை கோரியதை எதிர்த்து ஓபிஎஸ், ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு கிடையாது!!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா உரிமை கோரியதை எதிர்த்து ஓபிஎஸ், ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கு மீதான தீர்ப்பு தேதி ஒத்திவைக்கப்பட்டது. அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் 2017-ம் ஆண்டு செப்டம்பர் 12-ம் தேதி நடந்தது. அப்போது, கட்சியின் பொதுச் செயலாளர் பதவி ரத்து செய்யப்பட்டது. அதற்கு பதில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பதவிகள் உருவாக்கப்பட்டன.இந்தத் தீர்மானத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா உரிமையியல் வழக்குத் தொடர்ந்தார். 2017 செப்டம்பர் 12-ல் நடந்த அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து வி.கே.சசிகலா மனுத்தாக்கல் செய்தார்.

தொடர்ந்து, சசிகலாவின் வழக்கை நிராகரிக்க கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அவைத்தலைவர் மதுசூதனன் தரப்பில் நிராகரிப்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், ஈபிஎஸ் - ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உரிமையியல் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க இருந்தது.  4வது கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதேவி தீர்ப்பு வழங்க இருந்தார். ஆனால் அவர் இன்று விடுமுறை என்பதால் சசிகலா உரிமை கோரியதை எதிர்த்து ஓபிஎஸ், ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கில் வேறு ஒரு நாளில் தீர்ப்பு வழங்கப்படுகிறது.



Tags : OBS ,EBS ,Sasikala , Judge, Holiday, AIADMK, Sasikala
× RELATED மக்களவை தேர்தலில் ஓபிஎஸ் அணி...