×

கிரீன் கார்டுகளுக்காக எண்ணிக்கை வரம்பை அகற்ற நடவடிக்கை: அமெரிக்கா தகவல்

வாஷிங்டன்: அமெரிக்காவில் கிரீன் கார்டு விசா எண்ணிக்கை கட்டுப்பாடுகளை தளர்த்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. அமெரிக்காவில் இந்தியர்கள் உள்ளிட்ட ஏராளமான வெளிநாட்டவர் பணிபுரிந்து வருகின்றனர். அதில் சிலருக்கு மட்டுமே அமெரிக்காவில் நிரந்தரமாக வசிப்பதற்கான கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு நாட்டுக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே கிரீன் கார்டு ஒதுக்கப்படும் என்பதால், அதற்காக விண்ணப்பித்து பல்லாயிரம் இந்தியர்கள் அமெரிக்காவில் காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில், கிரீன் கார்டுகளுக்கான எண்ணிக்கை வரம்பை அகற்ற வழிவகுக்கும் மசோதாவை நீதித்துறைக்கான அமெரிக்க எம்.பி.க்கள் குழு நிறைவேற்றியுள்ளது. திறமையாளர்களை தக்க வைத்து கொள்ளவே இம்மசோதா கொண்டுவரப்படுவதாக அக்குழுவின் உறுப்பினர் ஜோ லாப்கிரேன் தெரிவித்துள்ளார். இதற்கு அதிபர் ஜோ பைடன் விரைவில் ஒப்புதல் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் அமெரிக்காவில் கிரீன் கார்டுக்காக பல ஆண்டுகளாக காத்திருக்கும் இந்தியர்களும், சீனர்களும் அதிகளவில் பலன் அடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.             


Tags : USA , Green Card, Number, Limit, Removal, USA, Information
× RELATED சில்லி பாயின்ட்…