கோஸ்டா ரிக்காவின் தனியார் கொரியர் நிறுவனத்தின் சரக்கு விமானம் தரையில் மோதி இரண்டாக பிளந்தது!!

கோஸ்டா ரிக்கா: கோஸ்டா ரிக்காவின் தனியார் கொரியர் நிறுவனத்தின் சரக்கு விமானம் தரையில் மோதி இரண்டாக உடைந்ததால் பரபரப்பு நிலவியது. பிரபல சர்வதேச கொரியர் நிறுவனமான DHL-க்கு சொந்தமான விமானம் ஒன்று கோஸ்டா ரிக்காவின் ஜுவான் சாண்டோ மரியா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மத்திய அமெரிக்க நாடான கௌத்தமாலாவிற்கு புறப்பட்டு சென்றது. சுமார் 100கிமீ கடந்து சென்று இருந்த நிலையில், விமானத்தில் ஹைட்ராலிக் அமைப்பில் ஏற்பட்ட பழுதினை விமானி கண்டறிந்தார். இதையடுத்து புறப்பட்ட விமானம்,விமான நிலையத்திற்கே தனியார் சரக்கு விமானம் மீண்டும் திரும்பியது.

ஓடுதளத்தில் தரையிறங்கிய போது, கட்டுப்பாட்டை இழந்த விமானம், தரையில் மோதி 2 ஆக பிறந்துவிட்டது. விமானம் விழுந்து நொறுங்கியது விமான நிலையம் முழுவதிலும் மிகுந்த பதற்றத்தை ஏற்படுத்தியது. உடனடியாக ஓடுதளத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் ரசாயன நுரையை பீய்ச்சி அடித்து விமானத்தில் தீப்பிடிக்காமல் செய்தனர். தரையில் விழுந்து நொறுங்கிய விமானத்தில் இருந்த விமானிகள் இருவரை தீயணைப்பு துறையினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை அடுத்து சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு 32 விமானங்கள் மாற்று விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. சரக்கு விமானம் விபத்தில் சிக்கியதற்கு ஹைட்ராலிக் அமைப்பில் ஏற்பட்ட பழுதே காரணம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Related Stories: