முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிய புகாரில் குமரி மாவட்ட பாஜக நிர்வாகி கைது

குமரி: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிய புகாரில் கன்னியாகுமரி மாவட்ட பாஜக நிர்வாகி ஜெயபிரகாஷ் கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியில் கடந்த 6-ம் தேதி நடைபெற்ற பாஜக கூட்டத்தில் அக்கட்சியின் மாவட்ட பிரச்சார அணி தலைவர் ஜெயபிரகாஷ் பேசியுள்ளார்.

அப்போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக தகவல் வெளியானது. இது குறித்து திமுக-வினர் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் ஜெயப்பிரகாஷ் மீது புகார் அளித்தனர். அந்த புகாரை பெற்ற காவல்துறை அவர் மீது பல்வேறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில், வழக்கு பதிவு செய்த போலீசார் ஜெயபிரகாஷ் நேற்று இரவு முதல் கைது செய்ய முயற்சி செய்த நிலையில், தற்போது ஆரல்வாய்மொழி போலீசார் கைது செய்துள்ளனர்.

Related Stories: