போரூர் மின் மயானம் மூடல்

சென்னை: சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலத்திற்குட்பட்ட போரூர் மின்சார மயானபூமியில்  பொருத்தப்பட்டுள்ள புகைப்போக்கி (சிம்னி) பழுதடைந்துள்ளது. எனவே, அதனை பழுதுபார்க்கும் பணி  நீட்டிப்பு செய்துள்ளதால், போரூர் மின்சார மயானபூமி  இன்று (8ம் தேதி) முதல்  வரும் மே.2ம் தேதி  வரை  25 நாட்களுக்கு இயங்காது. எனவே, பராமரிப்பு பணிகள் நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் அருகிலுள்ள 149வது வார்டுக்குட்பட்ட பிருந்தாவன் நகர் மயானபூமியினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: