×

விருகம்பாக்கம் தொகுதியில் உள்ள நூலகங்களை நவீனப்படுத்த வேண்டும்: பேரவையில் பிரபாகர் ராஜா எம்எல்ஏ வலியுறுத்தல்

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது விருகம்பாக்கம் தொகுதி எம்எல்ஏ பிரபாகர் ராஜா (திமுக) பேசியதாவது: விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் 3 கிளை நூலகங்கள் உள்ளன. இதில், கலைஞர் நகரில் 1982ல் தொடங்கப்பட்ட நூலக கட்டிடம் சிதிலமடைந்துள்ளது. எனவே, இதை நவீனப்படுத்தி கொடுக்க வேண்டும். விருகம்பாக்கத்தில் மொத்தம் 6 வார்டுகள் உள்ளன. இதில் 3 வார்டுகளில் உள்ள கிளை நூலகத்தில் குளிர்சாதன வசதி ஏற்படுத்தி தர ேவண்டும். மேலும் 3 வார்டுகளில் கிளை நூலகம் அமைக்க வேண்டும், என்றார்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், ‘‘தமிழகத்தில் 4,650 நூலகங்கள் உள்ளன. நூலகங்களை இன்னும் மேம்படுத்த வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் சொல்லியிருக்கிறார்கள்.
இதுபற்றி ஆய்வு செய்து, நூலக கட்டிடங்களை சரி செய்யும் பணிகள் தொடங்கும். ஏசி வசதி எங்கெல்லாம் தேவைப்படுகிறதோ அதுபற்றியும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.

Tags : Virukambakkam ,Prabhakar Raja ,MLA , Libraries in Virukambakkam constituency should be modernized: Prabhakar Raja MLA insists on assembly
× RELATED கணேசமூர்த்தி எம்பி மறைவு: ஈஸ்வரன் எம்எல்ஏ இரங்கல்