×

‘எதற்கு என்னை போட்டோ எடுக்கிறாய்?’ கரீனா கபூரால் கீழே விழுந்து போட்டோகிராபர் காயம்

மும்பை: கரீனா கபூரின் கோபமான செயலால் போட்டோகிராபர் கீழே விழுந்து காயம் அடைந்தார். பாலிவுட் நடிகை மலாய்க்கா அரோரா, சமீபத்தில் கார் விபத்தில் காயம் அடைந்தார். அவரை பார்ப்பதற்காக அவரது நெருங்கிய தோழியான நடிகை கரீனா கபூர், மலாய்க்காவின் வீட்டுக்கு சென்றிருந்தார். இந்த தகவல் அறிந்து மீடியா போட்டோகிராபர் ஒருவர் மலாய்க்காவின் வீட்டுக்கு வெளியே நின்றிருந்தார். கரீனா கபூர் வெளியே வந்ததும் அவரை புகைப்படம் எடுக்க ஆரம்பித்தார். இதை பார்த்து கோபம் அடைந்த, கரீனா, ‘எதற்கு என்னை போட்டோ எடுக்கிறாய்’ என கூறியபடி கோபமாக முன்னால் வந்தார். அந்த போட்டோகிராபர் பயந்து பின்னால் சென்றபோது, தடுக்கி விழுந்து காயம் அடைந்தார். அதை பார்த்தும் கரீனா அந்த போட்டோகிராபருக்கு உதவாமல், கோபத்துடன் அங்கிருந்து காரில் ஏறி சென்றுவிட்டார். இதை யாரோ படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுவிட்டனர். இதையடுத்து கரீனாவின் இந்த செயலுக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Tags : Kareena Kapoor , ‘Why are you taking photos of me?’ Kareena Kapoor fell down and injured the photographer
× RELATED மலபார் கோல்டு மற்றும் டைமண்ட்ஸில்...