×

வேடசந்தூர் தொழிலாளர்கள் மேற்கு ஆப்ரிக்காவில் தவிப்பு: ஒன்றிய அரசு மீட்க கோரி பேசும் வீடியோ வைரல்

வேடசந்தூர் : திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே கருப்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார் (42). மனைவி தீபா. 2 மகள்கள் உள்ளனர். கடந்த 2 ஆண்டாக கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவித்த செந்தில்குமார், மேற்கு ஆப்ரிக்காவில் ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் தனியார் நிறுவனத்தில் டிரைவர் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுவதை நண்பர்கள் மூலம் அறிந்தார். இதையடுத்து செந்தில்குமார் உள்ளிட்ட 3 பேர் மேற்கு ஆப்ரிக்காவிற்கு டிரைவர் வேலைக்கு சென்றனர். ஆனால் அங்கு தனியார் நிறுவனத்தினர், செந்தில்குமார் உள்ளிட்ட சிலரிடம் உங்களுக்கு பணியாற்ற தெரியவில்லை எனக்கூறி நிறுவனத்தை விட்டு வெளியேற்றியுள்ளனர். மேலும் காவல் நிலையத்தில் 3 பேர் மீதும் புகார் அளித்ததுடன், பாஸ்போர்ட்டையும் தர மறுத்துள்ளனர். இதனால் தாயகம் திரும்ப முடியாமல் 3 பேரும் தவித்து வருகின்றனர். இதுகுறித்து 3 பேரும் இந்திய தூதரகத்தில் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை என கூறப்படுகிறது. தாயகம் திரும்ப ஒன்றிய அரசு தங்களுக்கு உதவ வேண்டும் என வலியுறுத்தி செந்தில்குமார் உள்ளிட்ட 3 பேர் பேசும் வீடியோ திண்டுக்கல் பகுதி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.


Tags : West Africa ,government , Vedasandur workers suffer in West Africa: Video viral of union government demanding recovery
× RELATED நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம்...