×

அங்கன்வாடி மையம், சமுதாய கழிப்பறை கட்டிடங்கள் கட்ட பூமி பூஜை

மதுராந்தகம்: கருங்குழி பேரூராட்சியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம், சமுதாய கழிப்பறை ஆகிய கட்டிடங்கள் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த கருங்குழி பேரூராட்சி 2வது வார்டில் பழைய அங்கன்வாடி கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டவும், 10வது வார்டில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 100க்கும் மேற்பட்ட மக்கள் பயனடையும் வகையில் நவீன சமுதாய கழிப்பறை கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. ரூ.20 லட்சம் மதிப்பில் இப்பணிகள் 3 மாதத்தில் முடித்து, மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், கருங்குழி பேரூராட்சி தலைவர் தசரதன், துணைத் தலைவர் சங்கரி சங்கர், பேரூராட்சி செயல் அலுவலர் மா.கேசவன், வட்டார குழந்தைகள் நல அலுவலர் தமிழ்ச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர். திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அடுத்த கொத்திமங்கலம் கிராமத்தில் அரசு ஆரம்பப் பள்ளி உள்ளது. இங்கு, 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளியில் போதிய கழிப்பறை வசதியில்லாமல் இருந்தது. இதையடுத்து தனியார் அறக்கட்டளை மற்றும் தனியார் நிறுவனம் சார்பில், ரூ.3.5 லட்சத்தில் புதிய கழிப்பறை கட்டப்பட்டது. அதனை, மாணவர்களின் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

பள்ளி தலைமை ஆசிரியர் கோட்டீஸ்வரி தலைமை தாங்கினார். அறக்கட்டளை நிர்வாகி பிரகலாதன், தனியார் நிறுவன இயக்குனர் நீரேஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவர் ஜி.டி.யுவராஜ் கலந்து கொண்டு, புதிதாக கட்டப்பட்ட கழிப்பறையை மாணவர்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்து, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். நிகழ்ச்சியில் பேரூராட்சி துணை தலைவர் வீ.அருள்மணி, சமூக ஆர்வலர் காமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Bhoomi Puja ,Anganwadi ,Center ,Community Toilet Buildings , Bhoomi Puja to build Anganwadi Center, Community Toilet Buildings
× RELATED சாத்தான்குளத்தில் காட்சிப்பொருளான பழைய அங்கன்வாடி மைய கட்டிடம்