×

ரயில் பயணியை சுட்டு கொன்ற வழக்கு சிஆர்பிஎப் காவலருக்கு 7 ஆண்டுகள் சிறை

திருவள்ளூர்: ரயிலில் அமர இடம் தர மறுத்த பயணியை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த வழக்கில் சிஆர்பிஎப் காவலருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 அபராதமும் விதித்து திருவள்ளூர் குற்றவியல் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது, அசாம் மாநிலத்தை சேர்ந்த சிஆர்பிஎப் தலைமை காவலர் அத்தூல் சந்திரதாஸ். இவர் கடந்த 1996 இல் சென்னையில் இருந்து கோவை செல்லும் சேரன் பயணிகள் விரைவு ரயிலில் பயணம் செய்தார்.  அப்போது, உடன் பயணம் செய்த நாமக்கல் மாவட்டம், கூப்பிட்டான்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராஜாவிடம் அமர இருக்கை கேட்டுள்ளார். அதற்கு ராஜா இருக்கை தராததால் 2 பேருக்கும் இடையே தகராறு முற்றியது. . இதில் ஆத்திரமடைந்த அசாம் மாநில தலைமை காவலர் அத்தூல் சந்திரதாஸ் தனது துப்பாக்கியால் ராஜாவை சுட்டு கொலை செய்தார்.

இச்சம்பவம் குறித்து அரக்கோணம் இருப்பு பாதை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கடந்த 14.7.1996 அன்று அத்தூல் சந்திர தாஸ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளியே விடப்பட்டார். இந்த வழக்கை கடந்த 2002 ஆம் ஆண்டு கடம்பத்தூர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு குற்ற வழக்கு பதிவு செய்து நீதிமன்ற விசாரணையும் நடந்து வந்தது. இதற்கிடையே அப்துல் சந்திரதாஸ் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானதால், இதையடுத்து அவர் மீது 2002 இல் பிடியாணை பிறப்பித்து பல ஆண்டுகளாக நிலுவையிலிருந்தது. இந்த நிலையில் கடந்த 2020 டிசம்பர் மாதம் அசாம் மாநிலத்தில் பதுங்கியிருந்த அத்தூல் சந்திரதாசை கைது செய்து சட்டரீதியாக அழைத்து வந்து, திருவள்ளூர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் 2 முன்பு ஆஜார்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் வழக்கு திருவள்ளூர் மாவட்ட முதலாம் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று இறுதியாக வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் நிருபிக்கப்பட்டதால் சிஆர்பிஎப் காவலர் அத்தூல் சந்திரதாசுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இதில் அபராதம் செலுத்த தவறினால் கூடுதலாக 6 மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தார். இதனைத் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அத்தூல் சந்திர தாஸ் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags : CRPF , CRPF jailer jailed for 7 years for shooting dead train passenger
× RELATED சென்னையில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை