கூட்ட நெரிசலை சமாளிக்க நெல்லை, நாகர்கோவில் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: கோடைக்கால விடுமுறையின்போது ஏற்படும் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில்  சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு  ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே  வெளியிட்டுள்ள அறிக்கையில்:  தாம்பரம் - நாகர்கோவில்  இடையே சிறப்பு ரயில்  (06005)  வரும் 22, 29, மே 6, 13, 20, 27, ஜூன் 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில்  இரவு 7.30 க்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். அதை போன்று மறுமார்க்கத்தில் நாகர்கோவில் - தாம்பரம்  இடையே சிறப்பு ரயில் எண் (06006) வரும் 24, மே 1, 8, 15, 22, 29, ஜுன் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4.10 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

மேலும்  நெல்லையில் இருந்து தாம்பரம் இடையே ரயில் (06004) வரும் 17, 24, மே 1, 8, 15, 22, 29, ஜுன் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் நெல்லை ஜங்ஷனில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.20  மணிக்கு தாம்பரம்  வந்தடையும். அதைப்போன்று மறுமார்க்கத்தில் சிறப்பு ரயில் (06003) வரும் 18, 25, மே 2, 9, 16, 23, 30, ஜீன் 6,13, 20, 27 ஆகிய தேதிகளில் இரவு 10.20 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 10.35 மணிக்கு நெல்லை  சென்றடையும்.

Related Stories: