அமைச்சரவையை மாற்றியமைக்க முடிவு; ஆந்திர மாநிலத்தில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சர்கள் ராஜினாமா.!

அமராவதி: ஆந்திர மாநிலத்தில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். அமைச்சரவையை மாற்றி அமைக்க முதல்வர் முடிவு செய்துள்ளதால் அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா கடிதம் கொடுத்தனர். தற்போதைய அமைச்சரவையின் கூட்டம் நடந்து முடிந்தவுடன் ராஜினாமா கடிதங்களை ஜெகன்மோகனிடம் அமைச்சர்கள் ஒப்படைத்தனர். ஆந்திராவில் முதலமைச்சர் ஜெகன்மோகன்ரெட்டி தலைமையிலான அமைச்சரவை ராஜினாமா செய்துள்ளது. அனைத்து அமைச்சர்களும் முதல்வர் ஜெகன்மோகனிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கினர்.

அமைச்சரவை மாற்றியமைக்கும் வகையில் புதிய அமசகர்களின் பட்டியலை ஆளுநருக்கு அனுப்பப்பட உள்ளதாக தகவல் கூறப்படுகிறது. ஆந்திராவில் முதல்வர் தலைமையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. ஆட்சி அமைத்து அடுத்த மாதத்துடன் மூன்று ஆண்டுகள் நிறைவு பெற உள்ளன. இதனால் அமைச்சரவையை மாற்றியமைக்க ஜெகன்மோகன் ரெட்டி முடிவு செய்திருந்தார். அதன்படி, இறுதி அமைச்சரவை கூட்டம் முடிந்ததை தொடர்ந்து, முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவை தற்போது ராஜினாமா செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: