டிக்கெட் கேட்டு விஜய் ரசிகர்கள் சாலை மறியல்: கடலூரில் பரபரப்பு

கடலூர்: விஜய் நடித்து 13ம் தேதி வெளி வர இருக்கும் பீஸ்ட் திரைப்படத்திற்கான ரசிகர் காட்சிக்கு டிக்கெட் வழங்கவில்லை என கூறி அண்ணா பாலம் அருகே உள்ள திரையரங்கம் முன்பு விஜய் ரசிகர்கள் கடலூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். நெல்சன் தயாரிப்பில் விஜய் நடித்து ஏப்ரல் 13ம் தேதி பீஸ்ட் திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் இதற்கான டிக்கெட் விற்பனை மும்மரமாக நடைபெற்று வருகிறது. கடலூரில் முக்கியமான திரையரங்கில் வெளியாகவுள்ளது இந்த பீஸ்ட் திரைப்படம் பெரிய நடிகர்கள் நடித்து வெளிவரும் படங்களுக்கு விடியற்காலை 4 மணிக்கு ரசிகர் காட்சி வெளியாவது வழக்கம். அதன்படி  பீஸ்ட் திரைபடத்திற்கும் ரசிகர் காட்சி வெளியிடப்படவுள்ளது.

இந்நிலையில் கடலூர் புதுநகர் காவல் நிலையம் அருகே இருக்ககூடியே நியூ சினிமா திரையரங்கத்தில் ரசிகர் காட்சி விடியற்காலை 4 மணிக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்து. இந்த காட்சிக்கு ரசிகர் தரப்பில் அவர்களுக்கான டிக்கெட் வழங்கவில்லை என கூறி 100க்கு மேற்பட்ட விஜய் ரசிகர்கள் மக்கள் இயக்கத்தினர் அந்த திரையரங்கம் எதிரே இருக்ககூடியே சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்பொழுது அங்கு கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில் பொது மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளனார்கள். உடனடியாக அங்கு வந்த புது நகர் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட விஜய் ரசிகர்களை லேசான தடியடி செய்து அவர்களை அங்கிருந்து கலைத்தனர். இதனால் அங்கு அரை மணி நேரத்திற்கும் மேலாக நடந்த சாலை மாறியலால் அங்கு பரபரப்பு சூழல் ஏற்பட்டு பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். மேலும் போலீசார் அவர்களை காவல்நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரனை நடத்தி வருகிறார்கள்.

Related Stories: