ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் பணியில் நீடிக்க தகுதியில்லை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதியில்லை என உயர்நீதிமன்றம் தெரிவித்தது. ஏற்கெனவே அறிவித்து 12 ஆண்டு கடந்தும் தகுதிபெறாத ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு பெற உரிமையில்லை எனவும், ஆண்டுதோறும் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவது குறித்த அரசின் விதியை கண்டிப்புடன் அமல்படுத்தவும்  ஆணையிட்டது. கல்வி உரிமைச் சட்ட விதிகள் அமல்படுத்தப்படாமல் ஆசிரியர்கள் பணியில் நீடிப்பதற்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.  

Related Stories: