மயிலாப்பூர் கபாலீசுவரர் திருக்கோயிலில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட வாகன மண்டபம் மற்றும் LED திரை திற்ந்து வைத்தார் அமைச்சர் சேகர்பாபு

சென்னை: மயிலாப்பூர் கபாலீசுவரர் திருக்கோயிலில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட வாகன மண்டபம் மற்றும் LED திரையை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு  திறந்து வைத்தார்.  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இன்று 06.04.2022 மயிலாப்பூர் அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட வாகன மண்டபம் மற்றும் LED திரையை திறக்கப்பட்டது. அமைச்சர் கூறியதாவது, கபாலீசுவரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான கிழக்கு மாட வீதியில் உள்ள சுமார் 1200 சதுரஅடி பரப்பளவுள்ள காலியிடத்தில் திருக்கோயில் வாகனங்களான அருள்மிகு விநாயகர் சிறிய தேர், அருள்மிகு கற்பகாம்பாள் சிறிய தேர், அருள்மிகு சிங்காரவேலர் சிறிய தேர், அருள்மிகு சண்டிகேஸ்வரர் சிறிய தேர், மூஷிக வாகனம், சிறிய மயில் வாகனம், நாக வாகனம், பூதகி வாகனம் மற்றும் யானை வாகனம் ஆகிய வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு சுமார் ரூ.25 இலட்சம் செலவில் வாகன மண்டபத்தை  விஸ்வநாதன் என்பவர் திருக்கோயிலிடம் ஒப்படைத்தார்.

திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் திருக்கோயில் நடைபெறும் உற்சவங்களை நேரடியாகவும், திரை மூலமாகவும் கண்டு மகிழும் வகையில் LED திரை திருக்கோயிலின் நவராத்திரி மண்டபத்தில் ரூ.5 இலட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த LED திரையில் திருக்கோயிலின் தல வரலாறு, திருவிழா காட்சிகள் மற்றும் திருக்கோயில் விளக்க காட்சிகள் தொடர்ந்து ஒலி, ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள திருக்கோவில்கள் தலவரலாறு ஒளிப்பரப்படும், பக்தர் மகிழும் வண்ணம் முக்கிய கோவில்களில் அடுத்தடுத்து இது போன்று எல்.இ.டி(LED) திரை ஏற்படுத்தப்படும்.சீராய்வு கூட்டத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களின் நிலை குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது, அடுத்து வரும் திட்டங்கள் குறித்தும் மயில் சிலை கண்டுபிடிக்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது பணி நடைபெற்று வருகிறது, காவல்துறையும் விசாரணை நடத்துகிறது வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது, எந்த திருவிழாக்கள் எல்லாம் நடைபெறாமல் இருந்ததோ அவை எல்லாம் தற்பொழுது நடைபெறுகிறது, ஓடாத தேர் எல்லாம் சரிசெய்யப்பட்டு வீதிஉலா வருகிறது, தண்ணீர் இல்லா தெப்பக்குளங்கள் எல்லாம் தண்ணீர் நிரப்பி தற்பொழுது சரி செய்யப்பட்டு திருவிழாக்கள் நடைபெறுகின்றது, சித்திரை திருவிழா பணிகள் முழுமையாக நடைபெற்று வருகிறது பக்தர்களுக்கு வசதிகளும் பாதுகாப்பும் உறுதிசெய்யப்படும். இவ்விழாவில் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் வேலு இணை ஆணையர்கள் காவேரி, ரேனுகாதேவி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: