×

இலங்கையில் இனி பணக்காரர்களுக்கு கூடுதல் வரி: அரசின் வருவாயை அதிகரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேறியது புதிய மசோதா

கொழும்பு: இலங்கையில் பெரும் பணக்காரர்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நீடிக்கும் நிலையில் வருவாயை அதிகரிக்க இலங்கை அரசு நடவடிக்கையாக இலங்கை அரசு இந்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக உணவுப்பொருட்கள், எரிபொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அவற்றின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. மேலும் இலங்கையில் அரசியல் நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர்.

இந்த நிலையில், இலங்கை அரசின் வருவாயை அதிகரிக்கும் விதமாக கூடுதல் வரி விதிக்கும் மசோதா இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இலங்கை ரூபாயின் மதிப்பில் ரூ.200 கோடிக்கு மேல்  ஆண்டு வருமானம் ஈட்டும் தனி நபர் அல்லது நிறுவனங்களுக்கு கூடுதலாக 25 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் நிதியமைச்சரும் மகேந்திர ராஜபக்சேவின் சகோதரருமான பசில் ராஜபக்சே இந்த மசோதாவை கொண்டுவந்தார். அவர் கொண்டுவந்த இந்த மசோதாவானது நாடாளுமன்றத்தில் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.


Tags : Sri Lanka ,Parliament , Sri Lanka, Extra tax for the rich, Parliament, new bill
× RELATED சுறா மீன் துடுப்புகள், கடல் அட்டைகள் தீவைத்து எரிப்பு