×

அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா கோலாகலம் : பக்தர்கள் அக்னிச்சட்டி ஏந்தி நேர்த்திக்கடன்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை பொது அபிவிருத்தி டிரஸ்ட்டுக்கு பாத்தியப்பட்ட முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாடார்கள் உறவின்முறை தலைவர் சுதாகர் தலைமையில் மேளதாளத்துடன் பல்வேறு வாத்தியங்கள் முழங்க நிகழ்ச்சி நடந்தது. ஒவ்வொரு நாளும் அம்மன் உற்சவ மண்டபத்தில் பக்தர்களுக்கு அலங்காரத்தில் காட்சியளித்தார். ஒவ்வொரு மண்டகபடிதாரர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். மேலும் 15 நாட்கள் திருவிழா நடைபெறும். நேற்று முன்தினம் 5ம் தேதி பொங்கல் விழா நடந்தது. அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடந்தது. நேற்று 6ம் தேதி பக்தர்கள் 21, 51, 101, அக்கினி சட்டி ஆயிரத்திற்கு மேற்பட்டோர் எடுத்தும், கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு எஸ்பிகே பொருட்காட்சி கடந்த 27ம் தேதி முதல் வருகிற 17ம் தேதி வரை நடக்கிறது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாடார் உறவின்முறை தலைவர் சுதாகர், செயலாளர் சரவணன், எஸ்பிகே மேல்நிலைப்பள்ளி செயலாளர் காசிமுருகன் கல்லூரி செயலாளர் சங்கரசேகரன், பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயலாளர் கனகராஜ், ஜூனியர் பள்ளி செயலாளர் சுரேஷ்குமார், இண்டர்நேஷனல் பள்ளி செயலாளர் ராஜேஷ்குமார், தியாராஜன் மெட்ரிகுலேசன் பள்ளி செயலாளர் சரவணன், தேவஸ்தான டிரஸ்டி கணேசன், மேலாளர் மணிசேகரன், டைப்ரைட்டிங் மற்றும் தையற்பள்ளி செயலாளர் பிரசாத், மற்றும் நாடார் உறவின்முறை நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.



Tags : Arupupkota Muthumaryamman ,Banguni Pongal Festival ,Kolagalam ,Aknichatti Handhi , Aruppukottai Muthumariamman Temple Panguni Pongal Festival Golakalam : Devotees carry firecrackers
× RELATED குளித்தலை அருகே அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயில் தேரோட்டம் கோலாகலம்