×

இனி நீட் தேர்வு எழுத கூடுதலாக 20 நிமிடம்... 200 கேள்விகளுக்கு 200 நிமிடங்கள் என தேசிய தேர்வு முகமை விளக்கம்

சென்னை: இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வை எழுதுவதற்கான நேரம் 20 நிமிடம் அதிகரிக்கப்பட்டிருப்பதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நாடுமுழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு வருகின்ற ஜூலை 17-ம் தேதி நடைபெற உள்ளது.

இதற்கான ஆன்லைன் பதிவு நேற்று முதல் தொடங்கி, மே மாதம் 6-ம் தேதி இரவு 11 மணி 50 நிமிடங்கள் வரை நடைபெறுகிறது. விண்ணப்ப கட்டணம் செலுத்த மே 7-ம் தேதி கடைசி தேதி என்றும் தேசிய தேர்வு முகமை தகவலை வெளியிட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற உள்ளது.

இதில், 17 வயதுக்கு மேற்பட்டவர் அனைவரும் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், இதற்கு வயது உச்ச வரம்பு ஏதும் கிடையாது எனவும் கூறப்பட்டுள்ளது.  நாடு முழுவதும் 543 மையங்களிலும், வெளிநாடுகளில் 14 மையங்களிலும் இந்த தேர்வு நடைபெறுகிறது.

இந்தநிலையில், நீட் தேர்வு எழுத 3 மணி நேரம் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 20 நிமிடங்கள் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. பகல் 2 மணி முதல் மாலை 5 :20 மணி வரை நீட் தேர்வு நடைபெறும் தகவல் தெரிவித்துள்ளனர். நடப்பாண்டு முதல் 3 மணி நேரம் 20 நிமிடங்கள் தேர்வு நடைபெறும்; 200 கேள்விகளுக்கு 200 நிமிடங்கள் என தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.


Tags : National Exam Agency , Extra 20 minutes to write the NEED exam ... 200 minutes for 200 questions as described by the National Exam Agency
× RELATED 2024ம் கல்வியாண்டு நீட், ஜெஇஇ தேர்வு அட்டவணை வெளியீடு