நிகழ்ச்சி தொகுப்பாளரை அறைந்த விவகாரம்..நாளை நடைபெற உள்ள ஆஸ்கர் அகாடமி கூட்டத்தில் நடிகர் வில் ஸ்மித்துக்கு தடை விதிப்பு?

லாஸ் ஏஞ்சிலஸ்: ஆஸ்கர் விருது விழாவின் நிகழ்ச்சி தொகுப்பாளரை அறைந்த நடிகர் வில் ஸ்மித்துக்கு தடை விதிப்பது குறித்து நாளை முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த 28-ம் தேதி 94-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக், வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட் பற்றி நகைச்சுவையாக பேசினார். இதனால் கோபமடைந்த நடிகர் வில் ஸ்மித் மேடைக்கே சென்று நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக்கின் கன்னத்தில் அறைந்தார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக்கு ஆதரவாக பலதரப்பினரும், நடிகர் வில் ஸ்மித்துக்கு ஆதரவாக பலதரப்பினரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

அதனைத் தொடர்ந்து தனது செயலுக்கு வில் ஸ்மித் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டிருந்தார். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக ஆஸ்கர் அமைப்பு தனது விசாரணையை தொடங்கிய நிலையில், ஆஸ்கர் அமைப்பின் பதவியில் இருந்து நடிகர் வில் ஸ்மித் விளக்கினார்.

இந்நிலையில், ஆஸ்கர் அகாடமி கூட்டம் ஏப்ரல் 18ம் தேதி நடைபெற இருந்தது. ஆனால் இந்த கூட்டம் நாளை நடைபெற உள்ளதா கூறப்படுகிறது. மேலும் இந்த கூட்டத்தில் நடிகர் வில் ஸ்மித்துக்கு தடை விதிப்பது தொடர்பான முடிவுகள் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: