நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.310.92 கோடியில் கட்டப்பட்ட 9 பாலங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.310.92 கோடியில் கட்டப்பட்ட 9 பாலங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் பாலங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார். செங்கல்பட்டு, காஞ்சி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கோவை, மதுரை, நெல்லை மாவட்டங்களில் பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. 6 ரயில்வே பாலங்கள், ஒரு ரயில்வே கீழ் பாலம், ஆற்றுப்பாலம், ஒரு பல்வழிச் சாலை மேம்பாலம் திறக்கப்பட்டது.

Related Stories: