×
Saravana Stores

கர்நாடகா ஹிஜாப் விவகாரத்தில் அல்கொய்தா தலைவன் தலையீடு: வீடியோ வெளியிட்டு எச்சரிக்கை

புதுடெல்லி: கர்நாடகா பள்ளிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது தொடர்பாக சர்வதேச தீவிரவாத அமைப்பான அல் கொய்தாவின் தலைவன் அல் ஜவாஹிரி வீடியோ வெளியிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
‘கர்நாடகா பள்ளிகளில் சீருடைய மட்டுமே அணிய வேண்டும். ஹிஜாப் அணிந்து செல்லக் கூடாது,’ என்று கர்நாடகா உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சர்வதேச தீவிரவாத அமைப்பான அல்-கொய்தாவின் தலைவன் அல்-ஜவாஹிரி, வீடியோ உரையை நேற்று வெளியிட்டுள்ளான். 8.43 நிமிடங்கள் ஓடக் கூடிய இந்த வீடியோவில், ‘இந்து இந்தியாவின் உண்மை நிலையையும், அது பின்பற்றும் பல மத ஜனநாயகத்தின் ஏமாற்றுத்தனத்தையும் இந்த வீரப் பெண்மணி அமலப்படுத்தி இருக்கிறார். நம்மை சூழ்ந்துள்ள மாயைகளில் இருந்து விடுபட வேண்டும். இந்தியாவின் போலி மத ஜனநாயக பிம்பத்தால் நாம் ஏமாற்றப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். இது, முஸ்லிம்களை அடக்குவதற்கான கருவியே தவிர வேறு ஒன்றுமில்லை. ஹிஜாப்பை  பல மேற்கத்திய நாடுகள் தடை செய்துள்ளன. ஹிஜாப்புக்கு எதிரான நாடுகளுடன் பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகள் கூட்டணி வைத்துள்ளன,’ என்று கூறியுள்ளார்.

அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளால் தேடப்பட்டு வரும் அல் ஜவாஹிரி, உடல் நிலை பாதிப்பால் 6 மாதங்களுக்கு முன் இறந்து விட்டதாக தகவல் வெளியானது. இது குறித்து  பரவலாக சந்தேகங்கள் நிலவி வந்த நிலையில், ஜவாஹிரி உயிருடன் இருப்பதை இந்த வீடியோ உறுதி செய்துள்ளது. முஸ்கானின் தந்தை வேண்டுகோள்: முஸ்கானின் தந்தை முகமது உசைன் கான் கூறும்போது, ‘‘அந்த  வீடியோவை பார்த்தேன். அதில் ஒருவர் அரபி மொழியில் பேசுகிறார்.  அவர் யார் என்றே எங்களுக்கு தெரியாது. இந்தியாவில் நாங்கள் எல்லோரும் சகோதரர்கள் போல் வாழ்கிறோம். இதுபோன்ற சம்பவங்கள் எங்கள்  அமைதியை குலைத்து விடும். காவல்துறையும், மாநில அரசும் இது குறித்து விசாரித்து உண்மையை கண்டறிய வேண்டும்,’’ என்றார்.

Tags : Al Qaeda ,Karnataka , Al Qaeda leader's intervention in Karnataka hijab issue: Video released warning
× RELATED சட்டவிரோத இரும்புத்தாது ஏற்றுமதி...