×

தொடர்ந்து 14வது நாளாக நேற்றும் உயர்ந்தது: பெட்ரோல், டீசல் விலை தலா 76 காசு அதிகரிப்பு

சேலம்: நாடு முழுவதும் நேற்று 14வது நாளாக பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா 76 காசு உயர்ந்தது.  5 மாநில தேர்தல் முடிவுக்கு பிறகு கடந்த மாதம் 22ம் தேதி பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. அன்று முதல் 2 நாள் தவிர மற்ற நாட்களில் தொடர்ந்து விலை உயர்ந்து வருகிறது. நாடு முழுவதும் 14வது நாளாக நேற்றும் பெட்ரோல் லிட்டருக்கு 76 காசும், டீசல் லிட்டருக்கு 76காசும் அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று முன்தினம் பெட்ரோல் ₹110.09க்கு விற்கப்பட்ட நிலையில் நேற்று 76 காசு உயர்ந்து, ₹110.85க்கு விற்கப்படுகிறது. டீசல் ₹100.18ல் இருந்து 76 காசு உயர்ந்து, ₹100.94 ஆனது. சேலம் மாவட்டத்தில் பெட்ரோல் ₹110.41ல் இருந்து ₹111.17 ஆகவும், டீசல் ₹100.54ல் இருந்து ₹101.30 ஆகவும் விற்கப்பட்டு வருகிறது.

விலையேற்றம் தொடங்கிய 16 நாளில் பெட்ரோல் ₹9.45ம், டீசல் ₹9.51ம் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது விற்கப்படும் விலையே வரலாறு காணாத உயர்வாகும். மிக அதிகபட்சமாக நீலகிரியில் பெட்ரோல் ₹113.01க்கும், கடலூரில் ₹112.73க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர தர்மபுரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டணம், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ₹112க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags : Petrol and diesel prices rose by 76 paise each for the 14th consecutive day yesterday
× RELATED அனல் மின் நிலைய தேவைக்காக ஒடிசாவில்...