×

ஐக்கிய அரபு நாடுகளுக்கு கடத்தல் ரூ.10 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்: 3 பேர் கைது

சென்னை: சென்னை விமான நிலைய சர்வதேச சரக்கக பகுதியிலிருந்து ஐக்கிய அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக 25 பார்சல்கள் வந்திருந்தன. அவை சென்னையில் உள்ள ஒரே நிறுவனத்தில் இருந்து ஐக்கிய அரபு நாடுகளுக்கு செல்ல இருந்தது. அந்த 25 பார்சல்கள் 750 கிலோ இருந்தன. அதில் 1,200 காட்டன் ஷர்ட்டுகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.அதிகாரிகள் 25 பார்சல்களையும் திறந்து பார்த்தனர். அதில் காட்டன் ஷர்ட்டுகளுக்கு நடுவில் கிரிப்புக்காக அட்டைகள் வைக்கப்பட்டிருந்தன. அந்த அட்டைகளுக்கு இடையே சிறுசிறு துவாரங்கள் இருந்தன. அதில் வெண்மையான ஏதோ ஒரு பொருள் மறைத்து வைத்து இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து இரவு பகலாக இரண்டு நாட்கள் தொடர்ந்து சுங்க அதிகாரிகள் அந்த 1200 ஷர்ட்டுகளையும் தொடர்ந்து பிரித்து பார்த்து சோதனையிட்டனர். அந்த காட்டன் ஷர்ட் நடுவில் வைக்கப்பட்டிருந்த அட்டைகளில் வெள்ளைநிற பவுடர் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. மொத்தம் 515 காட்டன் ஷர்ட்டுகளில் பதுக்கிவைக்கப்பட்டிருந்தன. அதன்பின்பு அந்த பவுடரை ஆய்வுக்கூடத்தில் பரிசோதித்தனர். அது சூடோபெட்ரீன் என்ற ஒரு வகையான போதைப்பொருள் என்று தெரியவந்தது. அதன் மொத்த எடை 49.2 கிலோ. சர்வதேச மதிப்பு சுமார் ரூ.10 கோடி. அவற்றை பறிமுதல் செய்து ஏஜென்சியைச் சேர்ந்த 3 பேரை கைது செய்தனர்.

* இதுவே முதல்முறை
சென்னை விமான நிலையத்தில் இருந்து ஷர்ட்டுகளில் போதைப்பொருள் மறைத்து கடத்தப்படுவது இதுவே முதன்முறை என்று கூறப்படுகிறது. இவர்கள் ஏற்கனவே இதேபோல் வெளிநாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தி உள்ளார்களா என்பது பற்றியும் தீவிர விசாரணை நடக்கிறது. 


Tags : UAE , Rs 10 crore worth of drugs seized for smuggling to UAE: 3 arrested
× RELATED துபாயில் இந்தியர்களுக்கு புதிய...