×

சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க ஸ்டாலின் - நடிகர் விஜய் சந்திப்பு

சென்னை: திருமண நிகழ்வு ஒன்றில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர் விஜய் சந்தித்தனர். ‘மாஸ்டர்’ வெற்றி திரைப்படத்திற்குப் பிறகு, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள படம் ‘பீஸ்ட்’. பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் வரும் 13-ம் தேதி இந்தப் படம் திரையரங்கு முழுவதும் வெளியாகிறது. இதற்கிடையே கல்பாத்தி அகோரமின் மகள் திருமண வரவேற்பு நிகழ்வு இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. நடிகர் விஜய் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த வரவேற்பு நிகழ்வில் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.

அப்போது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், நடிகர் விஜய்யும் வணக்கம் சொல்லி பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர். நடிகர் விஜய் மற்றும் முதல்வர் முக ஸ்டாலின் ஆகியோர் திருமண மண்டபத்தில் சந்தித்தபோது அங்கிருந்த அனைவரும் கைதட்டினர். பின்னர், முதல்வர் முக ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மணமக்களை வாழ்த்தி அங்கிருந்து புறப்பட்டனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், நடிகர் விஜய்யும் சந்தித்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து வருகின்றன.

Tags : CM ,Chennai ,G. Stalin ,Vijay , Chief Minister MK Stalin meets actor Vijay at a wedding reception in Chennai
× RELATED தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவகாசியில் 7 செ.மீ. மழை பதிவு..!!