குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்தில் போரில் வீரமரணமடைந்த வீரர்களுக்கு அருணாச்சலபிரதேச கவர்னர் அஞ்சலி

குன்னூர்: குன்னூர் வந்த அருணாச்சல பிரதேச கவர்னர் பி.டி. மிஸ்ரா, வெலிங்டனில் உள்ள போர் நினைவு தூணில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் ராணுவ மையத்தில் 34வது உயர் மட்ட ராணுவ அதிகாரிகளின் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக அருணாச்சல பிரதேச கவர்னர் பி.டி. மிஸ்ரா நேற்று குன்னூர் வந்தார்.

இவர் போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் நினைவாக அமைக்கப்பட்ட மாவீரர் நினைவு தூணில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து மெட்ராஸ் ரெஜிமென்ட் 16வது கோர் லெப்டினன்ட் ஜெனரல் மன்ஜிந்தர் சிங்கும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதில் வெலிங்டன் எம்ஆர்சி கமாண்டன்ட் ராஜேஷ்வர் சிங் மற்றும் உயர் ராணுவ அதிகாரிகள், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: