×

பொதுமக்கள் வசதிக்காக அமைக்கப்பட்ட காவல் உதவி மையம்: திறந்து வைத்தார் சென்னை பெருநகர காவல் ஆணையாளர்

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் காவல் ஆணையரக 3ம் எண் நுழைவு வாயில் அருகே பொதுமக்கள் வசதிக்காக அமைக்கப்பட்ட காவல் உதவி மையம், பார்வையாளர்கள் பரிசோதனை அறை மற்றும் வாகன நிறுத்துமிடம் ஆகியவற்றை திறந்து வைத்தார். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், காவல் ஆணையரகத்தில் பொதுமக்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, காவல் ஆணையரகத்தின் நான்கு நுழைவு வாயில்களிலும் ஆயுதம் ஏந்திய ஆயுதப்படை காவலர்கள் காப்பு பணி மேற்கொள்வதுடன், 3வது நுழைவு வாயில் புகார் கொடுப்பதற்கு மற்றும் இதர பணிகளுக்காக வரும் பொதுமக்களை விசாரித்து அவர்களின்  குறைகளை கேட்டறிந்து துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

காவல் ஆணையரகத்திற்கு வருகை தரும் பொதுமக்களின் வசதிக்காகவும், அவர்களிடம் மனிதநேயத்துடன் குறைகளை கேட்டறிந்து உதவி புரிய காவல் உதவி  மையமும்,  பொதுமக்கள் மழை மற்றும் வெயில் காலங்களில் சிரமமின்றி வந்து செல்லவும், பணியிலிருக்கும் பாதுகாப்பு சென்னை காவல் மற்றும் ஆயுதப்படை காவல் ஆளிநர்களின் நலனை கருத்தில் கொண்டும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், நுழைவு வாயில் எண்.3 அருகே காப்பு பணி (Guard Duty) மேற்கொள்ளும் ஆயுதப்படை காவலர்கள் மற்றும் இதர பணிகள் மேற்கொள்ளும் பாதுகாப்பு சென்னை காவல் பிரிவினருக்கான கண்காணிப்பு மற்றும் பார்வையாளர்கள் சோதனை அறை (Security Chennai Police- Surveillance Room) மற்றும் இருசக்கர வாகன நிறுத்துமிடம் (2 Wheeler Vehicle Parking) ஆகிய கட்டுமானங்கள் தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டு நிறைவு பெற்றது.

அதன்பேரில், காவல் ஆணையரக நுழைவு வாயில் எண்.3 அருகே புதிதாக கட்டப்பட்ட காவல் உதவி மையம், (Police Assistance Booth) கண்காணிப்பு மற்றும் பார்வையாளர்கள் சோதனை அறை, (Security Chennai Police Surveillance Room) இருசக்கர வாகன நிறுத்துமிடம் (2 Wheeler Vehicle Parking) ஆகியவற்றை  சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் இன்று  (06.04.2022) மாலை திறந்து வைத்தார்.
இதன் மூலம் சென்னை காவல் ஆணையரகத்திற்கு வரும் பொதுமக்கள் சிரமமின்றி வந்து செல்லவும், பணிபுரியும் காவல் ஆளிநர்கள் பொதுமக்களிடம் மனித நேயத்துடன் அணுகி குறைகளை கேட்டறிந்து  அவர்களுக்கு உதவி புரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்) முனைவர் ஜெ.லோகநாதன், இ.கா.ப., இணை ஆணையாளர் தலைமையிடம் திருமதி.பி.சாமூண்டீஸ்வரி, இ.கா.ப., மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



Tags : Police Assistance Centre ,Chennai Metropolitan Police Commissioner , Police Assistance Center set up for public convenience: Opened by Chennai Metropolitan Police Commissioner
× RELATED சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பணி...