×

நடிகையுடன் வெங்கடேஷ் காதல்?

மும்பை: ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணிக்காக ஆடி வருபவர் ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர். தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட 27 வயதான இவர் ரஞ்சியில் மத்தியபிரதேச அணிக்காக ஆடி வருகிறார். சிஏ முடித்த இவர் தனக்கு கிடைத்த வேலையை உதறிவிட்டு கிரிக்கெட் களத்தில் இறங்கினார். கடந்த சீசனில் ஜொலித்த அவர் இந்தியஅணியிலும் வாய்ப்பை பெற்றார். ஆனால் இந்த சீசனில் இதுவரை நடந்த 3 போட்டியிலும்  16, 10,3என அவுட் ஆன நிலையில் நடிகையுடன் காதல் வலையில் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரபல தெலுங்கு நடிகை பிரியங்கா ஜவால்கர் முன்னணி நாயகியாக உள்ளார். விஜய் தேவரகொண்டாவுடன் டேக்ஸிவாலா படத்தில் நடித்து புகழ்பெற்ற பிரியங்கா, இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட படம் ஒன்றுக்கு வெங்கடேஷ் க்யூட் என்று கமெண்ட் போட்டார். அதற்கு பிரியங்காவும் யாரு, நீங்களா என்று பதில் கமெண்ட் போட்டுள்ளார். இதனால் இருவருக்கும் காதல் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags : Venkatesh , Venkatesh in love with actress?
× RELATED நாடாளுமன்ற தேர்தல் பணியின் போது...