×

பூண்டி அருகே 4 ஆண்டுகளாக அங்கன்வாடி மையம் இல்லாததால் கடும் அவதி: மழை, வெயில் காலங்களில் பாடம் நடத்த முடியாத அவலம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அருகே கடந்த 4 ஆண்டுகளாக அங்கன்வாடி மையம் இல்லாததால் கிறிஸ்துவ தேவாலயம் வளாகத்தில் பாதுகாப்பாற்ற சூழலில் குழந்தைகள் கல்வி பயிலும் சூழ்நிலை நீடிக்கிறது. தேவந்தவாக்கம் கிராமத்தில் செயல்பட்டு வந்த அங்கன்வாடி மையம் பழுதடைந்த நிலையில், குழந்தைகளின் பாதுகாப்பு கருது கடந்த 4 ஆண்டுகளாக அருகில் இருக்கும் கிறிஸ்துவ தேவாலயத்தில் இடமாற்றம் செய்து ஆசிரியர் பாடம் நடத்தி வருகிறார்.

மேலும் சமையல் உதவியாளர் இல்லாததாலும் சிறார்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கழிப்பிடம் இல்லாததால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். மழை மற்றும் வெயில் காலங்களில் கிறிஸ்துவ தேவாலயத்தில் பாடம் நடத்த முடியாது நிலைமை தொடர்கிறது. இதனால் உடனடியாக புதிய அங்கன்வாடி மையம் கட்டித்தர வேண்டும் என ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.            


Tags : Anganwadi Centre ,Pundi , Boondi, 4 years, Anganwadi Center, Avadi, rain-sun, disgrace
× RELATED ரிஷிவந்தியம் அருகே சாலையில் தூங்கிய பெண் மீது மினி லாரி ஏறி பலி