×

பாகிஸ்தானுக்கு எதிரான டி.20: ஆஸ்திரேலியா வெற்றி

லாகூர்: பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா இடையே ஒரே ஒரு டி.20 போட்டி லாகூரில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 66 ரன் (46 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். ஆஸி. பந்துவீச்சில், நாதன் எல்லீஸ் 4 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் ஆரோன் பிஞ்ச் 55 (45பந்து), டிராவிட் ஹெட் 26, மார்கஸ் ஸ்டோனிஸ் 23 ரன் அடிக்க 19.1ஓவரில் 7விக்கெட் இழப்பிற்கு 163 ரன் எடுத்த ஆஸ்திரேலியா 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிஞ்ச் ஆட்டநாயகன் விருது பெற்றார். 24 ஆண்டுக்கு பின் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்த ஆஸ்திரேலியா முன்னதாக நடந்த டெஸ்ட் தொடரை 1-0 என கைப்பற்றிய நிலையில், ஒருநாள் தொடரை 1-2 என இழந்தது குறிப்பிடத்தக்கது.



Tags : Pakistan ,Australia , T20 against Pakistan: Australia win
× RELATED பிளம்ஸ் பழத்தின் நன்மைகள்!