×

திமுக பிரமுகர் கொலை வழக்கில் 7 பேரை காவலில் எடுத்து விசாரிக்க எஸ்பிளனேடு போலீஸ் மனு தாக்கல்

தண்டையார்பேட்டை: பூக்கடையில் நடந்த திமுக பிரமுகர் கொலை வழக்கில் 7 பேரை காவலில் எடுத்து விசாரணை நடத்த எஸ்பிளனேடு போலீசார் மனுத்தாக்கல் செய்துள்ளனர். சென்னை பிராட்வே நாராயணப்பா ரோட்டில் பழக்கடை மற்றும் ஜூஸ் கடை நடத்தியவர் சவுந்தரராஜன் (59). அதிமுகவில் இருந்த இவர், சமீபத்தில் திமுகவில் இணைந்தார். இதன்பிறகு திமுக நடத்தும் அனைத்து நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு தீவிரமாக கட்சி பணியாற்றிவந்தார். இந்த நிலையில், கடந்த 3ம்தேதி பூக்கடை பஸ் நிலையத்தில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கும் பணியில் சவுந்தரராஜன் தலைமையில் திமுகவினர் ஈடுபட்டனர். அப்போது இரண்டு பைக்குகளில் வந்த கும்பல், சவுந்தரராஜனை சரமாரியாக வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பினர்.


இதுகுறித்து  எஸ்பிளனேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இக்கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட பிராட்வே வடக்கு பேருந்து நிலையம் பிளாட்பாரத்தில் வசித்து வரும் வசந்த் (எ) வசந்தகுமாரை (20) கைது செய்து அவரிடம் இருந்து ஒரு ஆட்டோவை பறிமுதல் செய்தனர். கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட வியாசர்பாடியை சேர்ந்த கணேசன், அவரது மகன் தினேஷ்குமார், இன்பா, கார்த்திக், குமரேசன் ஆகிய 5 பேர் நேற்றுமுன்தினம் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரணடைந்தனர். மேலும் கொலை வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர் சதீஷ்குமாரை (30) கைது செய்து அவரிடம் இருந்து ஒரு பைக்கை  பறிமுதல் செய்தனர். இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சதீஷ்குமார், வக்கீல் என தெரியவந்தது. இதையடுத்து  வசந்தகுமார், சதீஷ்குமார் ஆகியோரை விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், சவுந்தரராஜன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 7 பேரை காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிமன்றத்தில் எஸ்பிளனேடு போலீசார் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

Tags : Esplanade police ,DMK , Esplanade police file petition to probe DMK murder, 7 in custody
× RELATED தேர்தல் வெற்றியை திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்